English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள், 10 உயரம் வரை வளரக்கூடியது |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.6-1.4 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 5-11 X 2-4 செ.மீ., வடிவத்தில் வேறுபாடுடையது, நீள்வட்டம் முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் முனை மழுங்கியது முதல் மொட்டையானது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது சிலசமயங்களில் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ், உரோமங்களற்றது, உலரும் போது வெளிறிய பச்சை நிறமடைகிறது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 4 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஒர்பாலானவை மற்றும் இருபாலானவை கலந்தவை (பாலிகேமஸ்), ஈரகத்தில் உடையவை, சிறிய சைம் வகை மஞ்சரி, இலைக்கோணங்களில் அல்லது இலைக்கு எதிராகமைந்தவை, வெள்ளை நிறமானது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), உருளை-நீள்வட்டம் போன்றது, 1-1.5 செ.மீ. நீளமானது; விதை ஒன்றுடையது. |