(ஜி)னிடியா (க்)ளாக்கா (Fresen.) Gilg - தைமிலியேசி

இணையான பெயர் : லாசியோசைப்பான் (க்)ளாக்கஸ் Fresen.; லாசியோசைப்பான் எரியோசொப்பாளஸ் Decne

Vernacular names : தமிழ்ப் பெயர்: நாச்சி-நார், வாண்டாகொல்லிபட்டி.மலையாளப் பெயர்: நான்ஜு, நான்கு, நான்ஜிநார், நான்சு.கன்னடப் பெயர்: முக்குடே.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, முதிரும் போது ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை மஞ்சள் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது முதல் வளையமானது, இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது, மெல்லியவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 4-8.5 X 1-2 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியதுடன் அதன் முனை மூயூக்கரனேட், அலகின் தளம் மெட்டையானது அல்லது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது அல்லது அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள், தெளிவற்றது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை அல்லது கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் மஞ்சள் நிறமானது, தண்டின் நுனியில் காணப்படும் சீரமஞ்சரி,, மெண்மையான உரோமங்களுடைய பூவடிச்செதில் உடையது; மலர்காம்பு 0.2 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உலர் வெடியாக்கனி, சிறியவை, ஒர் விதையுடையது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 500-2000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆப்பிரிக்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Engler, Bot. Jahrb. Syst. 19. 265. 1894; Gamble, Fl. Madras 2:1244. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 402. 2004

Top of the Page