கார்சீனியா ட்ராவன்கோரிக்கா Bedd. - குளுசியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது.
சாறு : சாறு மஞ்சள் நிறமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 1-1.8 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது, தளத்தில் சிறிய உறை போன்ற அமைப்புடையது; இலை அலகு 5-11 X 1.3-2.5 செ.மீ. குறுகிய நீள்சதுர வடிவானது, அலகின் நுனி மழுங்கியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் ஒன்றுக்கொன்று இணையானவை; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது, இலையுதிரும்போது அலகின் மேற்பரப்பில் பள்ளமாக அமைந்தவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் தண்டின் நுனியில் காணப்படும் சைம்; பெண்மலர்கள் ஒன்று அல்லது இரண்டு மலர்களாக தண்டின் நுனியிலுள்ள இலைக்கோணங்களில் காணப்படுபவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்சதுரம் முதல் கோளம் வடிவம் போன்றவை, நிலையான சூலகத்தண்டையும் மற்றும் அகன்ற சூலகமுடிச்சையும் கொண்டது, பொதுவாக 1-விதையுடையது.

வாழியல்வு :

பொதுவாக மிதமான உயரமுடைய மலைகளில் காணப்படும் கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறிப்பாக பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, கடல் மட்டத்திலிருந்து 1000-1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை-அகஸ்த்திய மலைகளில் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Beddome, Fl. Sylv. 173. 1872; Gamble, Fl. Madras 1: 74. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 42. 2004.

Top of the Page