ஃப்ளக்கோர்சியா மோன்ட்டானா Graham - ஃப்ளக்கோர்சியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் நடுத்தண்டின் தளப்பகுதியில் கிளைத்த மற்றும் கிளைகளற்ற முட்களுடையது; மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.4-0.9 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 7-18 X 4-8 செ.மீ. குறுகிய நீள்வட்ட-நீள்சதுர, வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, கோரியேசியஸ், மையநரம்பு இலையின் அடிப்புறத்தில் உரோமங்களுடையது, சிலசமயங்களில் அனைத்து நரம்புகளும் உரோமங்களுடையது; தளத்திலே 3-5 நரம்புகளுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை, இலைக்கோணங்களில் காணப்படும் சைம் வகை மஞ்சரி.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கனியும் போது சிவப்பு நிறமடைகிறது, கோளவடிவானது, சதைப்பற்றானது; விதை ஒன்று.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகள் வரை குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. வரை காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - அதிகளவில் தெற்கு மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி மலைகளிலும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Cat. Pl. Bombay 10. 1839; Gamble, Fl. Madras 1: 54. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 32. 2004; Saldanha, Fl. Karnataka 1: 270. 1996.

Top of the Page