ஃபேக்ரையா சிலானிக்கா Thunb. - லோகானியேசி

இணையான பெயர் : ஃபேக்ரையா ஆப்ஒலேட்டா Wall.; ஃபேக்ரையா சிலானிக்கா Thunb.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது, இளம்பருவத்தில் ஒட்டு போன்ற பிற மரங்களின் மேல் வளர்பவை (ஸ்ட்ராங்க்லர்).
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, சிறிய வெடிப்புகளுடையது; உள்பட்டை வெள்ளை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெண்மையானவை (கார்க்), குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை குறுக்குமறுக்கமானவை, நெருக்கமாக தண்டின் நுனியில் அமைந்தவை; இலைக்காம்பு 0.5-2.5 செ.மீ. நீளமானது, இலைக்காம்பின் இருபுறங்களும் அலகின் தளம் நீண்டு (டெக்கரண்ட்) காணப்படும், இலையடியச்செதில் தளத்தில் உறை போன்றது; இலை அலகு 9-18 X 4-8.5 செ.மீ., பொதுவாக தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி வட்டமானது முதல் மிகச்சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் குறுகிய ஆப்பு வடிவானது மற்றும் டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது, சதைப்பற்றானது, அலகின் இருபுறங்களும் உரோமங்களற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் மிகச்சிறிதளவே புலப்படக்கூடியது; மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் அதற்கு மேலுள்ள சிறிய நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பெரியது, தண்டின் நுனியில் காணப்படும் சைம்; அல்லி இதழ்கள் வெளிப்புறத்தே மஞ்சள் நிறத்துடன் மற்றும் உட்புறத்தே வெள்ளை நிறத்துடன் காணப்படுபவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட முதல் கோளவடிவானது, நுனியில் அலகுடையது, 3-5 செ.மீ., அகன்ற நிரந்தரமான புல்லி இதழ்களுடையது, விதைகள் எண்ணற்றவை.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் மரங்கள் நெருக்கமற்ற பகுதிகளில், கடல் மட்டத்திலிருந்து 1800 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Vetensk. Acad. Handl. 3: 132. 1782; Gamble, Fl. Madras 2: 865. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 295. 2004; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 287. 1990; Cook, Fl. Bombay 1: 183. 1902.

Top of the Page