இயோனிமஸ் டைகோட்டமஸ் Heyne ex Roxb. - செலஸ்ட்ரேசி

:

தமிழ் பெயர் : மலைம்குரத்தா, வினி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை மெல்லிய வெடிப்புகளுடையது, உள்பட்டை பிங்க் கலந்த வெள்ளை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.5-0.9 செ.மீ. நீளமானது; இலை அலகு 2.5-8 X 1-5 செ.மீ., குறுகிய நீள்வட்டம், நீள்வட்டம், நீள்சதுரம்-ஈட்டி வடிவம், அலகின் நுனி மழுங்கியதுடன் அதிக்கூரியது அல்லது கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது அலகின் நுனி விளிம்பில் மிகச்சிறிய ரம்பபற்களுடையது, சார்ட்டேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள் மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் மற்றும் அதற்கு மேற்பட்ட நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஏழுக்கு மேற்பட்டது, இலைக்கோணங்களில் அமைந்த சைம், சிவப்பு நிறமான மலர்களை உடையது.
கனி / விதை : கேப்சூல், தலைகீழ் இதய வடிவமானது, ஒவ்வொரு அறையிலும் 1-2 விதைகளையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. முதல் 1400 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது - (என்டமிக்) - தெற்கு சயாத்திரி.

சான்று ஏடு :

Roxburgh, Fl. Ind. 2: 410. 1824; Gamble, Fl. Madras 1: 203. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 96. 2004; Saldanha, Fl. Karnataka 2: 95. 1996.

Top of the Page