English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது கொண்டது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.4-0.7 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 5-10 X 1.3-4 செ.மீ., குறுகிய நீள்வட்டம் அல்லது ஈட்டிவடிவம், அலகின் நுனி குறுகிய கூரியது அல்லது அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது; அலகின் விளிம்பு தடித்தது, சிறிது உள்நோக்கி வளைந்து (ரெவலுட்), உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்புகள் அடிப்பரப்பில் தெளிவில்லாமல் காணப்படும், மேற்பரப்பில் சிறிது தெளிவாக காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | இலைக்கோணங்களில் அமைந்த சைம் மஞ்சரி; மலர்கள் பளபளப்பற்ற பர்ப்பிள் நிறமுடையது. |
| கனி / விதை : | கேப்சூல், தலைகீழ் முட்டை வடிவம், 5 இறக்கைகளுடையது, 1-2 விதைகள் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும். |