யுஜினியா மோக்ரொசெப்பாலா Duthie - மிர்ட்டேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழவழப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது; இளம்பருவத்தில் இலைகள் சிவப்பு நிறமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.5-0.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 7-14.5 X 2.7-5.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது அல்லது நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-15 ஜோடிகள், தெளிவற்றது, ஒன்றொடுன்று விளிம்பில் (லுப்) இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் வெள்ளை நிறமானது, காம்பற்றது, இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது இலைகளற்ற முதிர்ந்த கிளைகளில் தோன்றுபவை, தனித்தவை அல்லது ஓர் ஜோடியாக காணப்படுபவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- மத்திய சயாத்திரி.

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. India 2: 501. 1879; Cooke, Fl. Bombay 1: 493 (524). 1903; Saldanha, Fl. Karnataka 2: 24. 1996; Cook, Fl. Bombay 1: 493. 1903; Almeida, Fl. Maharashtra 2: 265. 1998.

Top of the Page