English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 12 மீ. வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற வளையமானது; மரப்பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | கிளைகள் பொதுவாக தொங்கியவை; சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.5 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 6-9 x 2-2.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது முதல் வால்-அதிக்கூரியது மற்றும் மழுங்கிய முனையுடையது; அலகின் தளம் சமமற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-15 ஜோடிகளுடையது, மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஓர்பாலானவை; ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் கூட்டமாக காணப்படும்; பெண்மலர்கள் இலைக்கோணங்களில் தனித்தனியாக காணப்படும். |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, 1-விதையுடையது. |