டிப்டிரோகார்ப்பஸ் இண்டிகஸ் Bedd. - டிப்டிரோகார்ப்பேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரம் 60 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, பழுப்பு நிறம்; பட்டையின் உட்புறம் பளபளப்பாக அரக்கு நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிக்கிளைகள், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, இலையடிச்செதில் உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது; சிறு நுனிக்கிளைகள் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்புடையது, மற்றும் கொத்தாக இலைகள் நுனிக்கிளைகளில் காணப்படும்; இலையடிச்செதில்கள் ஈட்டி வடிவமுடையது, 5.5 செ.மீ. வரை நீளமுடையது, தளப்பகுதியில் தடித்தது, மரக்கன்றில் நட்சத்திர வடிவ உரோமங்கள் காணப்படும்; முதிர்ந்த இலைகள் 8-12 X 4-6 செ.மீ., நீள்வட்டம் அல்லது குறுகிய முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது அல்லது சிறிது வால் போன்று நீண்டது, அலகின் தளம் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் நேரானது, கிட்டதட்ட இணையானது; மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட், வளைவானது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி, 3-8 மலர்கள் கொண்ட ரெசீம், இலைக்கோணங்களில் காணப்படுபவை; மலர்கள் வெண்நிறமுடையது, நறுமணம் மிகுந்தது.
கனி / விதை : உலர்கனி (நட்), வழுவழுப்பான புல்லி இதழ் குழாய்களினால் சூழப்பட்டுள்ளது மற்றும் நிரந்தரமான மூன்று சிறிய அல்லி இதழ்கள் மற்றும் 2 பெரிய புல்லி இதழ்கள் கொண்டவை, 1-2 விதைகளை கொண்டது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு மரமாக (கேனோப்பி) மற்றும் எமர்ஜெண்ட் மரங்களாக (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக), குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - தெற்கு மற்றும் மத்திய சாயாத்திரி பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Beddome, Flora Sylvatica 94. 1871; Gamble, Fl. Madras 1: 81. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 44. 2004; Saldanha, Fl. Karnataka 1: 191. 1996.

Top of the Page