English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரம், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மெலிதானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 2 செ.மீ. வரை நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 7-13 X 2.5-7 செ.மீ., நீள்வட்டம்-நீள்சதுரம் முதல் நீள்சதுரம்-ஈட்டி வடிவமுடையது, சிறிதானது மற்றும் வால் போன்று நீளமானது, அல்லது கூரியது, அலகின் தளம் வட்டமானது மற்றும் சிறிதளவு டெக்கரண்ட், உரோமங்களற்றது, சப்கோரியேசியஸ், நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் கொண்டது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-11 ஜோடிகள். |
| மஞ்சரி / மலர்கள் : | ஓர்பால் மலர்கள்; ஆண்மலர்கள் சிறிய சைம் மற்றும் 3-4 மலர்களை கொண்டது; பெண்மலர்கள் தனித்தவை, காம்பற்றது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது, மிகச்சிறிய காம்புடையது, 3 செ.மீ. குறுக்களவுடையது, அடர்ந்த அரக்கு நிறமான உரோமங்களுடையது; பழத்தின் புல்லி இதழ்கள் வளரக்கூடியது, வளைந்தது மற்றும் மெலிதான அலை போன்ற விளிம்பு கொண்டது; 1-4 விதைகளை கொண்டது. |