டையோஸ்பைரஸ் புருரியன்ஸ் Dalz. - எபனேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கருப்பு நிறமுடையது, உள்பட்டை சிவப்பு நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் நெருக்கமானவை, நட்சத்திர வடிவ உரோமங்களுடையது. (0.5 செ.மீ.)
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.4 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது; இலை அலகு 5.5-15 X 2-6.5 செ.மீ., குறுகிய நீள்வட்டம்-நீள்சதுரம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவமுடையது, அலகின் நுனி வால் போன்று நீண்டது, அலகின் தளம் வட்டமானது முதல் சிறிய இதய வடிவம் (சப்கார்டேட்) போன்றது, சார்ட்டேசியஸ், காய்ந்த இலைகள் அரக்கு நிறமுடையது, இருபரப்பிலும் மையநரம்பு மற்றும் விளிம்புகளில் உரோமங்கள் காணப்படும்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-13 ஜோடிகள், மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் பரந்த வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள்; ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படும் 1-2 மலர்கள் கொண்ட சைம்; பெண்மலர்கள் தனித்தவை, இலைக்கோணங்களில் காணப்படும்.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை வடிவமுடையது, கூர்மையான உரோமங்களுடையது, 2 X 1.5 செ.மீ. நீளமானது, பழத்தின் புல்லி இதழ்கள் நீண்டது; விதைகள் 4, நீள்சதுர வடிவமுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. வரையான மலைகளிலுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - ஏலமலை, பாலக்காடு, வயநாடு மற்றும் கூர்க் பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Hooker’s J. Bot. Kew Gard. Misc. 4: 110. 1852; Gamble, Fl. Madras 2: 774. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 272. 2004; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 207. 2005; Saldanha, Fl. Karnataka 1: 340. 1996.

Top of the Page