English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரம் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, பட்டையின் உட்பகுதி சிகப்பு நிறமுடையது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, புதிய சிறுநுனிக்கிளைகளில் படிந்த உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.6-1.1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், புதிய இலைக்காம்பில் உரோமங்களுடையது மற்றும் முதிர்ந்தவற்றில் உரோமங்களற்றது; இலை அலகு 6-18 X 3.5-7.5 செ.மீ., நீள்சதுரம் முதல் நீள்வட்டம்-நீள்சதுரமுடையது, அலகின் நுனி படிப்படியாக குறுகி வால் போன்று நீண்டு மழுங்கிய முனை, சிலவற்றில் அலகின் நுனி பள்ளமானது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவம் கொண்டது, முழுமையான அலகின் விளிம்பு கொண்டது, கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது, உலர்ந்த இலை அரக்கு நிறமுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-13 ஜோடிகள், தெளிவற்றவை; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | ஓர்பால் மலர்கள், ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் கொத்தாக கழலைகள் மீது காணப்படும், பட்டு போன்ற உரோமங்களுடையது; பெண்மலர்கள் காம்பற்றது, இலைக்கோணங்களில் கொத்தாக காணப்படும். |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி) உருண்டையானது, 2.5 செ.மீ. குறுக்களவுடையது, முதிர்ந்தவற்றில் உரோமங்களற்றது, புல்லி இதழ்கள் நிரந்தரமானது, புல்லி இதழ்கள் வளைந்தது மற்றும் அலைப்போன்றது விளிம்புகளுடையது; விதைகள் 4. |