டைமார்போகேலிக்ஸ் பெட்டோமை (Benth.) Airy Shaw - ஈபோர்பியேசி

இணையான பெயர் : ட்ரைடாக்சிஸ் பெட்டோமை Benth.

தமிழ் பெயர் :

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெள்ளை நிறமானது; உள்பட்டை சிவப்பு கலந்த ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் மெல்லியது, உரோமங்களற்றது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் நுண்ணியது, எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 1-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 8-13 X 2.5-5 செ.மீ., நீள்வட்டம் முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது மற்றும் மழுங்கிய முனையுடையது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு விலகி காணப்படும் பிறை போன்ற பற்களுடையது மற்றும் பிறையின் நடுவே சுரப்பிகளுடையது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இருபிரிவுகளுடைய (டைக்காட்டமஸ்) சைம்; மலர்கள் வெள்ளை நிறமானவை, ஓர்பாலானவை; ஓர் சைம் மஞ்சரியின் நடுவிலுள்ள மலர் மிகச்சிறிய காம்புடைய பெண்மலர்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), மூன்று 2-பக்க பிளவுகளுடைய வட்ட வடிவானது, விதைகள் 3.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 550-1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன - குறிப்பாக அகஸ்த்திய மலை (தெற்கு சயாத்திரி ).

சான்று ஏடு :

Kew Bull. 23: 124. 1969; Gamble, Fl. Madras 2: 1341. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 414. 2004.

Top of the Page