டாஃப்னிபில்லம் நீல்கீரின்ஸ் (Wt.) Rosenth. - டாஃப்னிபில்லேசி

இணையான பெயர் : கௌசியா நீல்கீரின்சிஸ் Wt.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிதமான உயரமுடைய பசுமைமாறாமரம், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, கிளையின் நுனியில் மட்டும் நெருக்கமாக அமைந்தவை; இலைக்காம்பு 5 செ.மீ. நீளமானது; இலை அலகு 7-12.5 X 3-7.5 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர அல்லது தலைகீழ் முட்டை வடிவமானது, அலகின் நுனி மழுங்கியதுடன் சிறிய நீட்சியுடையது, அலகின் தளம் மழுங்கியது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசினாற் போல் காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் கிட்டதட்ட 8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம்; மலர்கள் ஒர்பாலானவை, சிலசமயங்களில் ஓரகம் கொண்டவை; ஆண்மலர்கள் அல்லி இதழ்களற்றவை; மகரந்ததாள் பெரியது மற்றும் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), முட்டை அல்லது நீள்சதுர வடிவானது, வெளிப்புற கனிசுவர் (பெரிகார்ப்) தடித்தது, ஓர் விதையுடையது.

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1500-2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Engl. Pflanzenr. Daphniphyllac. 4. 147 a: 7. 1919; Gamble, Fl. Madras 2: 1311. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 414. 2004; Saldanha, Fl. Karnataka 2: 129. 1996.

Top of the Page