குல்லினியா எக்ஸ்ஏரில்லேட்டா Robyns - பாம்பாகேசி

இணையான பெயர் : குல்லினியா எக்ஸ்யல்சா Wt.

தமிழ் பெயர் : ஆய்னி பலா, காரணை, காராவி, காராயினி, மலைகோங்கி, பொலவு, வெடிப்பிளா, வெடுபிளா, வேலுபிளா.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய பசுமைமாறாமரம், தாங்கு வேர் (பட்ரஸ்டு) உடையது, 40 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் கலந்த வெள்ளை நிறமானது, முதிர்ந்த மரங்களில் பெரிய செதில்களாக உதிரக்கூடியவை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் பொன் நிறம் கலந்த அரக்கு நிறமான செதில்களுடையவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, செதில்களுடையது, 1.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 7.5-16 (-25.5) X 2.7-6.2 (-7.6) செ.மீ., குறுகிய நீள்சதுர அல்லது நீள்சதுர-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது முதல் சிறு பிளவுகளுடையது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது மற்றும் மேல்புறம் வழுவழுப்பானது, கீழ்புறம் பொன் நிறமான செதில்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் மற்றும் மூன்றாம் நிலை நரம்புகள் கிடையாது / தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பொன் நிறம் கலந்த அரக்கு நிறமுடையது, தொகுப்பானது, தடித்த கிளைகளில் காணப்படுபவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), முட்கள் போன்ற நீட்சியுடையது, கோளவடிவானது, 12.7 செ.மீ. குறுக்களவுடையது, 5-அறைகளுடையது; விதைகள் அரக்கு நிறமானது, எண்ணற்றது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி)மரமாக, மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 600-1400 மீ. வரை), பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு சயாத்திரி மற்றும் மத்திய சயாத்திரியில் வயநாடு வரை காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Bull. Jard. Bot. Nat. Belg. 40: 249. 1970; Gamble, Fl. Madras 1: 101. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 56. 2004; Saldanha, Fl. Karnataka 1: 240. 1996.

Top of the Page