கிளிரோடென்றோம் விஸ்கோசம் Vent. - வெர்ப்பினேசி

இணையான பெயர் : கிளிரோடென்றோம் இன்பார்ச்சுனேட்டம் non L.

Vernacular names : தமிழ்ப் பெயர்: பாருகிலை, பெருகிலை, வட்டக்கன்னி.மலையாளப் பெயர்: வட்டப்-பெரிவல்லம், பாராகம், பெருக்கு.ஆங்கிலப் பெயர்: குளோரி மரம்.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி அல்லது சிறிய மரம், 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் நான்கு கோணங்களுடையது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 2.5-8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது; இலை அலகு 7-17 (-23) X 7.5-15 செ.மீ., அகன்ற நீள்வட்டம்-முட்டை வடிவானது அல்லது ஆர்பிக்குலார், அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது பற்களுடையது, சப்கோரியேசியஸ், உரோமங்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும் மற்றும் உரோமங்களுடையது; தளத்திலே 5-7_நரம்புகளை உடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 2-3 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பு நோக்கிய இணையான அகன்ற பெர்க்கரண்ட்..
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும், பேனிக்கிள் வகை மஞ்சரி, 18 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது; மலர்கள் ஒழுங்கற்றவை (சைகோமார்பிக்), வெள்ளை நிறமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கருப்பு நிறமானது, கிட்டதட்ட கோள வடிவமானது, பெரிய நிரந்தரமான பிங்க் நிறமான புல்லி இதழ்கள் உடையது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1800 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Vent., Jard. Mal. 1: t. 25. 1803; Gamble, Fl. Madras 2: 1100. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 357. 2004.

Top of the Page