கிளிஸ்டான்ந்தஸ் ட்ராவன்கொரன்சிஸ் Jablonszky - ஈபோர்பியேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம், 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, நுண்ணிய உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் பக்கவாட்டில் அமைந்தவை, சிறியவை, 0.1 செ.மீ. நீளமானது, நிரந்தரமானது; இலைக்காம்பு 0.3-0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உலரும் போது சுருக்கங்களுடையவை (ருக்கோஸ்), இளம்பருவத்தில் உரோமங்களுடையது; இலை அலகு 7-12 X 2.5-3.3 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி நீண்ட அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர் பாலானவை, காம்பற்றது அல்லது மிகச்சிறிய காம்புடையது, இலைக்கோணங்களில் தொகுப்பாகமைந்தவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), 3-அறைகளுடையது, 1.5 செ.மீ. குறுக்களவுடையது; ஒவ்வொரு அறையிலும் 2 விதைகள்.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 400-1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Engler, Pflanzenr. 65 21.1915; Gamble, Fl. Madras 21283.1993 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6 412. 2004.

Top of the Page