சிப்பாடெஸ்சா பேஸிபெரா (Roth) Miq. - மீலியேசி

இணையான பெயர் : மீலியாபேஸிபெரா Roth.

Vernacular names : தமிழ்ப் பெயர்: புளிப்பன் செடி, சவட்டு செடிமலையாளப் பெயர்: கைபானராங்கி, பொட்டி, புளிப்பன்செடிகன்னடப் பெயர்: சிடிகொல்லில், செடுப்பீரா, பெட்டாடா பெவு, அடுசாகெ

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உரோமங்களுடையது.
இலைகள் : கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், 10-28 செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும், பல்வினேட்; மத்தியகாம்பு 4-12.5 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது; சிற்றிலைக்காம்பு 0.1-0.3 செ.மீ. நீளமானது மற்றும்கூட்டிலையின் நுனியுள்ள சிற்றிலையின் காம்பு நீளமானது சிற்றிலைகள் எதிராக அமைந்தவை அல்லது கிட்டத்தட்ட எதிராக அமைந்தவை, 4-5 ஜோடிகள் சிலசமயங்களில் 6 ஜோடிகள் நுனியில் ஒர் சிற்றிலை மட்டும் உடையது, 2-10 X 1.3-4.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, ஆப்பு வடிவானது அல்லது அட்டனுவேட், அலகின் விளிம்பு தளத்தில் முழுமையானது மற்றும் நுனியில் பற்களுடையது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்புநரம்பில் உரோமங்களுடையது ; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 5-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோளவடிவானது, 0.7 செ.மீ. குறுக்களவுடையது, 5 பைரின் உடையது; ஒர் பைரின் 1-2 விதைகளுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, திரிந்த பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகள் மற்றும் மழை அதிகம் பெறும் இலையுதிர்காடுகளிலும் காணப்படும்.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன .

சான்று ஏடு :

Ann. Mus. Lugd.-Bat. 4: 6. 1868; Gamble, Fl. Madras 1: 176.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 89. 2004; Saldanha, Fl. Karnataka 2: 232. 1996.

Top of the Page