English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் நிறமானது, மணமற்றது; உள்பட்டை மஞ்சள் நிறமானது |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, அடர்த்தியாக நுண்ணிய உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கம் முதல் கிட்டதட்ட எதிரடுக்கம் போன்றது; இலைக்காம்பு 1-3.5 செ.மீ. உரோமங்களுடையது; இலை அலகு 6-11 X 2.5-5.5 செ.மீ., அகன்ற நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி குட்டையான அதிக்கூரியது மற்றும் அகன்ற முனையுடையது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, குறுத்திலைகள் அடர்த்தியாக உரோமங்களுடையது, முதிர்ந்த இலைகள் உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு வெளிறிய பச்சை நிறமானது, கோரியேசியஸ்; 3 நரம்புகளை அலகின் தளத்தில் அல்லது தளத்திற்கு சற்று மேல் கொண்டது, பக்கநரம்புகள் இரண்டும் கிட்டதட்ட அலகின் நுனி வரை செல்பவை; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பை நோக்கிய கிடைமட்டத்தில் இணையான பெர்க்கரண்ட்; மற்ற சிறுநரம்புகள் நுண்ணிய வலைப்பின்னல் போன்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள், குறைந்த எண்ணிக்கையில் மலர்களுடையவை, நுண்ணிய உரோமங்களுடையவை. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது; கனியிலுள்ள ப்பீரியான்ந்த் கோப்பை போன்றது, அடர்த்தியாக மற்றும் மெண்மையான உரோமங்களுடையது; விதை ஒன்றுடையது. |