English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் நிறமானது, நீர் கோர்த்தது போன்ற எழும்பிய அமைப்புடையது (புஸ்டுலார்), நறுமணமிக்கது; உள்பட்டை வெளிறிய ப்ரவுன் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கம் முதல் கிட்டதட்ட எதிரடுக்கம் போன்றது; இலைக்காம்பு 2 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 9.5-30 X 3.5-7.5 செ.மீ., நீள்சதுரம் அல்லது நீள்வட்டம்-நீள்சதுரம் முதல் நீள்சதுரம்-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் கீழ்பரப்பு உரோமங்களற்றது, மேற்பரப்பு பளபளப்பானது, நறுமணமுடையது, பக்கநரம்புகள் இரண்டும் அலகின் நுனி வரை செல்பவை; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பை நோக்கிய கிடைமட்டத்தில் இணையான பெர்க்கரண்ட்; மற்ற சிறு நரம்புகள் நெருக்கமான வலைப்பின்னல் போன்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி கிட்டதட்ட தண்டின் நுனியில் காணப்படுபவை மற்றும் இலைக்கோணங்களில் நெருக்கமில்லாத மலர்களுடைய பேனிக்கிள், அதிக எண்ணிக்கையில் மலர்களுடையது, உரோமங்களுடையது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, ப்பீரியான்ந்த் கோப்பை 0.7 செ.மீ. நீளமானது அதன் இதழ்கள் தெளிவானது; விதை ஒன்றுடையது. |