English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மிகப்பெரிய இலையுதிர் மரம் , முதல் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சிவப்பு-ப்ரவுன் நிறமானது மெல்லிய ஒழங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, சாம்பல் நிற மெண்மையான உரோமங்களுடையது. |
| இலைகள் : | கூட்டிலை, இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிப்பின்னேட்), 12-50 செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, பல்வினேட்; மத்தியகாம்பு 16 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது; சிற்றிலைக்காம்பு 0.2-1 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 10-24, மாற்றுஅடுக்கமானவை அல்லது கிட்டத்தட்ட எதிரடுக்கமானவை , (இளம்பருவத்தில் சிலசமயங்களில் 1 அல்லது 2 ஜோடிகளுடையது), 5-13 X 2.5-6.5 செ.மீ., தளத்திலுள்ள சிற்றிலைகள் சிறியவை, குறுகிய முட்டை வடிவானது முதல் ஈட்டி வடிவானது, அலகின் நுனி குறுகிய அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், உரோமங்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள், கிளைத்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை அல்லது கண்களுக்கு புலப்படாது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள் , சாம்பல் நிற மெண்மையான உரோமங்களுடையது; மலர்கள் கிரீம் நிறமானது. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சியூல்), கோளவடிவானது, முதல் 4 செ.மீ. குறுக்களவுடையது, 4-5 அறைகளுடையது, உரோமங்களற்றது; விதைகள் எண்ணற்றவை, தளத்தில் அகன்ற சிறகுடையது. |