English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 22 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழவழப்பானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.5-0.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 9-15.5 x 3-5 செ.மீ., நீள்சதுர வடிவானது முதல் நீள்வட்ட வடிவானது-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது அல்லது வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது, கோரியேசியஸ், உலரும் போது சிவப்பு ப்ரவுன் நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-10 ஜோடிகள், மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை மற்றும் மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது அல்லது கண்களுக்கு புலப்படாது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம்; மலர்கள் வெள்ளை நிறமானது. |
| கனி / விதை : | உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்); ஒரு விதையுள்ள கனி. |