கேசேரியா ருபஸ்சன்ஸ் Dalz. - ஃப்ளக்கோர்சியேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 16 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, பெரிய லெண்டிசெல் உடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு_வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்தவல்லது; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது, சிவப்பு-ப்ரவுன் நிறமானது; இலை அலகு 7-19 X 3- 7.5 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவானது அல்லது நீள்வட்ட-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது மற்றும் முனை திருகியது, அலகின் தளம் சமமற்றது அல்லது ஆப்பு வடிவானது அல்லது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, உரோமங்களற்றது, கோரியேசியஸ், ஒளிபுகும் சுரப்பி புள்ளி மற்றும் கோடுகளுடையது, உலரும் போது கரும்பச்சை நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 10-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் 0.4 செ.மீ. குறுக்களவுடையது, பச்சை-வெள்ளை நிறமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்) கோள வடிவமானது, 2 செ.மீ. நீளமானது, கனியும் போது ஆரஞ்ச்-மஞ்சள் நிறமானவை.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 200-1600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Briq., Ann. Cons. Jard. Bot. Geneve 62. 1898; Gamble, Fl. Madras 1: 520. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 31. 2004; Cook, Fl. Bombay 1: 521. 1903; Almeida Fl. Maharashtra 1: 62.1996

Top of the Page