கேந்தியம் டைகாக்கம் (Gaertn.) Teys. & Binn. ரகம் லான்சியோலேட்டா Arn.

இணையான பெயர் : கேந்தியம் லான்சியோலெட்டம் Arn.; ப்ளக்ட்ரொனியா டைடிமா (Gaertn. f.) Kurz ரகம் லான்சியோலெட்டா (Wt.) Gamble; (ப்)சிட்ரக்ஸ் டைகோகாஸ் Gaertn. ரகம் லான்சியோலெட்டா (Arn.) Ridsd.

Vernacular names : தமிழ்ப் பெயர்: நல்லமாந்தரம்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் இருஇலைக்காம்பிற்கு நடுவே (இண்டர்பீட்டியோலார்) உடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை_அலகு 6-8 X 2-3.5 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்ட-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் அட்டனுவேட்-டெக்கரண்ட், அலகின் விளிம்பு முழுமையானது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 4 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, அம்பல் வகை மஞ்சரி; மலர்கள் பச்சை-வெள்ளை நிறமானது; மலர்காம்பு 0.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்); விதைகள் 2.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரமுள்ள மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-அகஸ்த்தியமலை மற்றும் வருசநாடு மலைகள் (தெற்கு சயாத்திரி).

சான்று ஏடு :

Bull. Bot. Surv. India 3: 107. 1961; Gamble, Fl. Madras 2: 625. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 233. 2004.

Top of the Page