புச்சனானியா லான்சியோலேட்டா Wt. - அனகார்டியேசி

தமிழ் பெயர் : காட்டுமா

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம்
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 1-1.5 செ.மீ. நீளம், உரோமங்களற்றது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 5-11.5 X 2-3.5 செ.மீ., ஈட்டி அல்லது நீள்சதுரம்-ஈட்டி வடிவம், அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவமானது, கீழ்பரப்பு உரோமங்களற்றது; இரண்டாம் நிலை நரம்பு 10-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்பு வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனி அல்லது பக்கவாட்டில் அமைந்த பேனிக்கிள், 5-7 செ.மீ. நீளம், மெல்லிய அடர்ந்த காவி நிறமான உரோமங்கள்; இருபாலானவை மலர், மஞ்சள் நிறம்; மலர்காம்பு 0.5-1 செ.மீ. நீளம், உரோமங்களற்றது; புல்லி வட்டம் முட்டை வடிவம், உரோமங்களற்றது; அல்லி வட்டம் உரோமங்களற்றது, பின்புறம் வளைந்து காணப்படும்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 1.5 செ.மீ. விட்டம், தட்டையானது, உரோமங்களற்றது. ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

அரியது, கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, உயரம் குறைந்த மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலை (தெற்கு மலபார் மற்றும் தெற்கு சயாத்திரி) இந்தியா மற்றும் மியான்மார்.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Wight, Ic. t. 237. 1839 & Illustr.1: 185; Gamble, Fl. Madras 1: 259. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 111. 2004.

Top of the Page