English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மிகப்பெரிய இலையுதிர் மரம், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது அல்லது முதிர்ந்த மரத்தில் செதில்கள் போன்று உதிருபவை; உள்பட்டை பிங்க் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| சாறு : | மரப்பட்டை வெட்டுப்படும் போது ஒட்டக்கூடிய சிவப்பு நிறமான சாறுயுடையது. |
| இலைகள் : | இலைகள், மூவ்விலை கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் 0.6 செ.மீ. நீளமானது, கோட்டு-ஈட்டி வடிவானது, எளிதில் உதிரக்கூடியது; கூட்டிலையின் மையக்காம்பு 5-15.5 செ.மீ. நீளமானது, பல்வினேட், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, பக்கவாட்டிலுள்ள சிற்றிலையின் காம்பு 1 செ.மீ. நீளமானது, நடுவிலுள்ள சிற்றிலையின் காம்பு 3.5 செ.மீ. நீளமானது; சிற்றிலையின் அலகு நீள்வட்டம் முதல் அகன்ற நீள்வட்டமானது, பொதுவாக மத்தியிலுள்ள சிற்றிலை பெரியது, 7.5-13 X 3.5-9 செ.மீ., சிற்றிலையின் அலகின் நுனி வால் அல்லது வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 5-7 ஜோடிகள், அலகின் பின்புறத்தில் நரம்புகள் கிளைக்குமிடத்தில் உரோமங்களற்ற டொமேஸ்சியா உடையது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் தெளிவற்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்; மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை, பச்சை நிறமானது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, 1.3 செ.மீ. குறுக்களவுடையது; விதைகள் 6-8, நீள்சதுர வடிவானது, முக்கோண வடிவானது. |