English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய மரங்கள் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை கரும்சாம்பல் நிறமானது, வழவழப்பானது, முதிரும் போது செதில்களாக உதிருபவை, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை கிரீம் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது, இலையடிச்செதில் உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது. |
| சாறு : | வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் 2.5 செ.மீ. நீளமானது, ஈட்டி வடிவானது, உரோமங்களுடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1.3-3 செ.மீ. நீளமானது, தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது அல்லது பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது ; இலை அலகு 10-30.5 X 5-14 செ.மீ., முட்டை வடிவானது முதல் அகன்ற நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது அல்லது சிறிய அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது அலை போன்றது (இளம்பருவத்தில் பிளவுகளுடையது ), கோரியேசியஸ், உலரும் போது ப்ரவுன் நிறமானது, கீழ்பரப்பு இளம்பருவத்தில் அடர்த்தியாக உரோமங்களுடையது, முதிரும் போது அலகின் கீழ்பரப்பில் மையநரம்பு மற்றும் நரம்பயை தவிர பிற பகுதிகள் உரோமங்களற்றது ; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-12 ஜோடிகள், நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்றவலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஓர் பாலானவை; ஆண் மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படுபவை, ஸ்பைக் வகை மஞ்சரி, தெங்கியவை, 14 செ.மீ. நீளமானது; பெண் மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படுபவை, ஸ்பைக் வகை மஞ்சரி, முட்டைவடிவானது. |
| கனி / விதை : | சின்கார்ப் (சொரோசிஸ்), கோளவடிவானது அல்லது நீள்வட்ட வடிவானது நீளமான தடித்த முற்களுடையது., கனியும் போது ஆரஞ்ச் நிறமானது; விதைகள் எண்ணற்றவை, முட்டைவடிவானது. |