அரிங்க வைட்டியை Griff. - அரிக்கேசி

:

தமிழ் பெயர் : ஆலம்பனை, ஆலபனை, காட்டுதேங்காய்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம்.
தண்டு மற்றும் மரப்பட்டை : சாம்பல் நிறமானது, கருப்பு நிறமான நார் போன்ற இலை உறையின் நிரந்தரமான பகுதி அடர்த்தியாக தண்டைச் சுற்றி காணப்படுகின்றன.
இலைகள் : இலைகள் சிறகுவடிவக்கூட்டிலைகள், 3.5-8 மீ. நீளமானது; சிற்றிலைகள் 30-100 X 2-2.5 செ.மீ., நீள்கோட்டு வடிவம், வாளைப்போன்றது, கூட்டிலையின் நுனியிலுள்ள சிற்றிலைகள் இணைந்தவை மற்றும் தலைகீழ் கூம்பு வடிவானது, அலகின் நுனி குறுகியது, சிலசமயங்களில் குட்டையானது, சமமற்ற இரண்டு பிளவுகளுடைய நுனிகளுடையது, அலகின் தளம் சமமற்ற காதுமடல் போன்றது, அலகின் மேற்பரப்பு கரும்பச்சையாகவும், கீழ்பரப்பு மெழுகு பூசினாற் போன்றும் காணப்படுபவை, அலகின் விளிம்பு சமமானது அல்லது அலகின் நுனி பகுதியில் ரம்ப பற்களுடையது.
மஞ்சரி / மலர்கள் : ஆண்மஞ்சரி மற்றும் பெண்மஞ்சரிகள் தனித்த ஸ்ஃபாடிக்ஸ் பாளைகள் கொண்டது, 1 மீ. நீளமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கடினமானது, கோளவடிவானது; 2-3 விதைகளையுடையது.

வாழியல்வு :

அதிகமாக செங்குத்தான பாறைகளில், குறிப்பாக தாழ்ந்த மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், கடல் மட்டத்திலிருந்து 1500 மீ. வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு மட்டும் மற்றும் மத்திய சயாத்திரிகளில் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Calcutta J. Nat. Hist. 5: 475. 1845; Gamble, Fl. Madras 3: 1558. 1998 (re. ed); Cook, Fl. Bombay 2: 804. 1902; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 504. 2004.

Top of the Page