அப்போரோசா லிண்ட்லியானா (Wt.) Bail. - ஈபோர்பியேசி

இணையான பெயர் : செஃபா லிண்ட்லியானா Wt.

தமிழ் பெயர் : கோடலி, வெட்டிகன், வெட்டில், விட்டில், விட்டி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 15 மீ., உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் நிறமானது; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் நீள்சதுர-ஈட்டி வடிவானது, நுனி கூரியது, எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.7-1.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், இருமுனைகளும் உப்பியது, உரோமங்களற்றது; இலை அலகு 7.5-17 X 3-7.5 செ.மீ., குறுகிய நீள்சதுர முதல் நீள்வட்ட வடிவானது, அலகின் நுனியில் நீண்ட அதிக்கூரியது முதல் வால்-அதிக்கூரியது அதன் முனை மொட்டையானது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட மேல் எழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் சிறிது அகன்ற பெர்க்கரண்ட் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் கேட்கின்; பெண்மலர்கள் குட்டையான சைம்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), வழுவழுப்பானது, கோளவடிவானது, 1.3 செ.மீ. குறுக்களவுடையது, 2-4 விதைகளையுடையது.

வாழியல்வு :

பொதுவாக மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகள் வரை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 950 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Baillon, Etud. Gen. Euphorb. 645. 1858; Gamble, Fl. Madras 2: 1309. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 410. 2004; Saldanha, Fl. Karnataka 2: 118. 1996.

Top of the Page