அப்போரோசா பியஸிபார்மிஸ் Thw. - ஈபோர்பியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரங்கள்.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 0.5-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 5.5-8 X 3-5.5 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவம் அல்லது வட்டவடிவானது (ஆர்பிக்குலார்) அலகின் நுனியில் மழுங்கியது அல்லது சிறு பிளவுடையது (ரெட்யுஸ்). அலகின் தளம் ஆப்பு வடிவானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் மேற்பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 5 ஜோடிகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் கேட்கின்ஸ், 2.5 செ.மீ. நீளமானது; பெண்மலர்கள் குட்டையான சைம்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), படகு போன்றது(பியஸிபார்ம்), உரோமங்களற்றது, அலகுடையது, 2 செ.மீ. நீளமானது, 2-4 விதைகளையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - மத்திய சயாத்திரி.

சான்று ஏடு :

Thwaites, Gamble, Fl. Madras 2:1309. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 410. 2004; Saldanha, Fl. Karnataka 2: 118. 1996.

Top of the Page