அப்போரோசா போர்டில்லோனை Stapf - ஈபோர்பியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலை அலகு 15 X 5.5 செ.மீ., குறுகிய நீள்சதுர வடிவம், அலகின் நுனி வால் போன்றது, அலகின் தளம் வட்டமானது முதல் கூரியது போன்றது, அலகின் கீழ்புறத்தில் மையநரம்பு உரோமங்களுடையது, மையநரம்பு மேற்புறத்தில் அலகின் மேற்பரப்பைவிட மேல் எழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகளுடையது, விளிம்பில் இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் சிறிது அகன்ற வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் அமைந்தவை; மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படும் கேட்கின், 1.5 செ.மீ. வரை நீளமானது; பெண்மலர்கள் குட்டையான குறைந்தளவு மலர்களுடைய சைம்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), 2 செ.மீ. நீளமானது, முட்டை வடிவானது, அலகுடையது, மெண்மையான முட்களுடையது (எக்கினேட்), உரோமங்களுடையது; சூலகமுடிச்சு நிரந்தரமானது, 6-பிளவுகளுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, குறைந்தளவு உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு சயாத்திரி.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

Hooker, Ic. 23, t. 2204. 1892; Gamble, Fl. Madras 2: 1309. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 409. 2004.

Top of the Page