அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ் (L.) R. Br. - அப்போசினேசி

இணையான பெயர் : எக்கைட்ஸ் ஸ்காலாரிஸ் L.

தமிழ் பெயர் : எழிலைபாலை, முக்கம்பாலை, பாலை, பாலிகருடா

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

தண்டு மற்றும் மரப்பட்டை : மரம், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : பட்டை சாம்பல்-அரக்கு (ப்ரவுன்) நிறமானது, லெண்டிசெல்லேட் (பட்டைத்துளைகள்) கொண்டது.
சாறு : மரத்தின் கிளைகள் வட்டஅடுக்கமானது; சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : வெள்ளை நிறமான பால் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : இலைகள் தனித்தவை, 4-7 சமமற்ற இலைகள் கனுவில் வட்டஅடுக்கில் அமைந்தவை; இலைக்காம்பு 0.4-1.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 6-20 X 2.5-7 செ.மீ., குறுகிய நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி வட்டமானது அல்லது பள்ளங்களுடையது (ஈமார்ஜினேட்), அலகின் தளம் ஆப்பு
கனி / விதை : மலர்கள் இருபாலானவை, தண்டின் நுனியில் அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை, பேனிக்குலேட் சைம், பச்சை கலந்த வெள்ளை நிறமானது.

வாழியல்வு :

பாலிக்கிள், கோட்டு வடிவானது, 20-50 செ.மீ. நீளமானது; விதைகள் அதிகமானது, கோட்டு-நீள்சதுர வடிவானது, தட்டையானது மற்றும் இருமுனைகளிலும் உரோமங்கள் (கோமா) கொண்டது.

காணப்படும் இடம் :

மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகள் முதல் அதிக மழை பெறும் இலையுதிர்க்காடுகள், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 200-700 மீ. வரையான மலைகளில் வரை காணப்படுபவை.

சான்று ஏடு :

Mem. Wern. Nat. Hist. Soc. 1: 76. 1811; Gamble, Fl. Madras 2: 810-814. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 280. 2004; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 274. 1990; Cook, Fl. Bombay 1: 132. 1902.

Top of the Page