English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் இயல்பு வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் 8 மீ உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வெடிப்புகளுடையது; உள்பட்டை வெள்ளை மற்றும் ஆரஞ்ச் நிற புள்ளிகளுடையது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வட்டம் போன்றது, லெண்டிசெல்லேட் (பட்டைத்துளைகள்) கொண்டது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை சுழல் போல் அமைந்தவை; கூட்டாக தண்டின் நுனியில் அமைந்தவை; இலைக்காம்பு 0.5-2 செ.மீ. நீளமானது, பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை_அலகு 4-11 X 2-4 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியது அல்லது வட்டமானது அல்லது அலகின் தளம் ஆப்பு வடிவானது முதல் கூரியது, அலகின் விளிம்பு சமதளமானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது, அலகின் கீழ் பரப்பு மெழுகு பூசினாற் போன்ற நீலம் கலந்த பச்சை நிறமானது (க்ளாக்கஸ்); மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்ரண்ட். |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி பேனிக்கிள் வகை மஞ்சரி |
| கனி / விதை : | முழுச்சதைக்கனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 2.5 செ.மீ. நீளமானது; விதை ஒன்றுடையது. |