அக்லையா போர்டிலோனை Gamble - மீலியேசி

இணையான பெயர் : அக்லையா எலக்நாய்டியா (Juss.) Benth. ரகம் போர்டிலோனை (Gamble ) Nair

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் உடையது; உரியக்கூடியது; உள்பட்டை சிவப்பு கலந்த ப்ரவுன் நிறமானது மற்றும் வெள்ளை நிறமான கோடுகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியான ஆரஞ்சு ப்ரவுன் நிறமான லெப்பிடோட் செதில்களுடையது.
இலைகள் : இலைகள் கூட்டிலைகள் ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலைகள் (இம்பேரிபின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, இலைகள் தண்டின் நுனியில் கூட்டமாக மற்றும் நெருக்கமாக அமைந்தவை; கூட்டிலையின் மத்தியகாம்பு (ராக்கிஸ்) 5.5-8 செ.மீ. நீளமானது, லெப்பிடோட் செதில்களுடையது; சிற்றலைக்காம்பு 1-2 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 6, எதிராகமைந்தவை மற்றும் நுனியில் தனித்த சிற்றிலை உடையது, 6-14 X 1.5-5 செ.மீ., குறுகிய நீள்வட்டம்-தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் மழுங்கிய முனையுடையது, அலகின் தளம் ஆப்பு வடிவமானது, அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், (உலரும் போது தெளிவாக தெரியும்), அடர்த்தியாக ஆரஞ்சு ப்ரவுன் லெப்பிடோட் செதில்களை அலகின் அடிப்புறத்திலுடையது, அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது, சப்கோரியேசியஸ்; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-14 ஜோடிகள், தெளிவானது, அலகின் மேற்பரப்பில் பள்ளமாக தெரியக்கூடியது; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கிள் வகை, அடர்த்தியாக லெப்பிடோட் செதில்களுடையது, இலைக்கோணங்களில் அல்லது கிட்டதட்ட தண்டின் நுனியில் அமைந்தவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 2.2 செ.மீ. நீளமானது, தலைகீழ் முட்டை வடிவானது, குறுகிய தளமுடையது, 2-அறைகளுடையது, அடர்த்தியாக ஆரஞ்சு ப்ரவுன் லெப்பிடோட் செதில்களுடையது; விதை அறைக்கு ஒன்றாக காணப்படுவது.

வாழியல்வு :

பெரும்பாலும் மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் மற்றும் கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மரங்கள் அடர்த்தியற்ற மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. முதல் 1800 மீ. வரை உயரமான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - அகஸ்த்திய மலையில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Bull. Misc. Inform. Kew 1915: 346. 1915; Pannell, A taxonomic monograph of the Genus Aglaia Lour. (Meliaceae), 120. 1992; Gamble, Fl. Madras 1: 180. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 87. 2004; Saldanha, Fl. Karnataka 2: 230. 1996.

Top of the Page