English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மரங்கள் தாங்கு வேர்கள் (பட்ரஸ்டு) உடையவை, 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சிவப்பு கலந்த ப்ரவுன் நிறமானது, பெரிய செதில்கள் போன்று உதிருபவை, லெண்டிசெல் உடையது; உள்பட்டை பிங்க் கலந்த ப்ரவுன் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் மெலிந்தவை, அடர்த்தியாக லெப்பிடோட் செதில்களுடையவை. |
| இலைகள் : | இலைகள் கூட்டிலைகள், ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; கூட்டிலையின் மத்தியகாம்பு (ராக்கிஸ்) 4.5-7 செ.மீ. நீளமானது, கோணங்களுடையது, லெப்பிடோட் உடையது; சிற்றிலைக்காம்பு 0.4-1 செ.மீ. நீளமானது, பொதுவாக நுனியிலுள்ள சிற்றிலைக்காம்பு மற்ற பக்கவாட்டிலுள்ளவைவிட நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; சிற்றிலை 2-3 ஜோடிகள் எதிராகமைந்தது அல்லது கிட்டதட்ட எதிராகமைந்தது, மற்றும் நுனியில் ஒற்றை சிற்றிலை கொண்டது, 6-12 X 2.4-5 செ.மீ. நீள்வட்டம் அல்லது நீள்வட்டம்-முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியதுடன் முனை மழுங்கியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது அல்லது சிலசமயங்களில் சிறிது சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், அலகின் பின்புறத்தில் அடர்த்தியாக நுண்ணிய லெப்பிடோட் ப்ரவுன் நிறமான செதில்களுடையது, அலகின் மேற்பரப்பில் வழுவழுப்பானது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் மெலிந்தவை 6-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஒர்பாலானவை; மஞ்சரி இலைக்கோணங்களில் அல்லது பக்கவாட்டிலமைந்த பேனிக்கிள், லெப்பிடோட் செதில்களுடையது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி), 2 செ.மீ. நீளமானது, கோளவடிவானது அல்லது சமமற்றதுடன் நுனி அழுந்தியவை, உலரும் போது நீள்வாக்கில் சுருங்கிய கோடுகளுடையது. 3-4 அறைகளுடையது, லெப்பிடோட் செதில்களுடையது; விதை அறைக்கு ஒன்றாக காணப்படுபவை. |