அகஸ்தியாமலையா பாஸிப்ஃபுளோரா (Bedd.) S. Rajkumar & Janarth. - குளுசியேசி

:

தமிழ் பெயர் : புலி-வாயில்லா, புதாங்கொல்லி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பசுமைமாறாமரங்கள், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கான வளையமானது; மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 12 X 4 செ.மீ.,நீள்சதுர வடிவானது, அலகின் நுனி மழுங்கிய அதிக்கூரியது, அலகின் தளம் வட்டம் அல்லது கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரிகள் தனித்தவை அல்லது இரட்டை மலர்களாக இலைக்கோணங்களில் இலை உதிர்ந்த பின் காணப்படுகின்றன; மலர்காம்பு 2.5 செ.மீ. நீளமுடையது, உரோமங்களற்றது; அல்லி இதழ்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : கனி கோளவடிவானது, 2 X 1.7 செ.மீ. இருபிளவுகளுடையது, நுனி கூரியது, ஒர் விதையுடையது.

வாழியல்வு :

நீரோடைகளின் அருகாமையிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 முதல் 900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - குறிப்பாக அகஸ்த்திய மலையில் மட்டும் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

மிகவும் அழியும் தருவாயிலுள்ளவை (கிரிட்டிகல்லி எண்டோன்ஜர்டு, ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

J. Bot. Res. Inst. Texas 1(1): 129. 2007; Beddome, Fl. Sylv. 93. 1871; Gamble, Fl. Madras 1: 77. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 43. 2004.

Top of the Page