ஆக்டினோடஃபுனே மலபாரிக்கா Balkr. - லாரேசி

இணையான பெயர் : ஆக்டினோடஃபுனே ஹிர்சுட்டா J.Hk.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் (பட்டைத்துளைகள்) உடையது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, துரு போன்ற உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, சப்வர்டிசில்லேட்; இலைக்காம்பு 2.5 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 8.5-21 X 2.5-6 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி கூரியது-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது-ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சப்கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்); இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமானது, பெர்க்கரண்ட், ஆனால் மெல்லியது, கிட்டதட்ட கிடைமட்டமானது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை, கூட்டமாகமைந்தது, மிகச்சிறிய மஞ்சரி காம்புடையது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கோளவடிவானது, கோப்பை போன்ற நிரந்தரமான ப்பீரியான்ந்த் மேல் கனி அமைந்தது, கனியும் போது கருப்பு நிறமடைகிறது; விதை ஒன்றுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக தாழ்ந்த மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. உயரம் வரையான மலைகள்) அதிகம் மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

J. Bombay Nat. Hist. Soc. 63: 329. 1967; Gamble, Fl. Madras 2: 1231. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 394. 2004; Saldanha, Fl. Karnataka 1: 58. 1984.

Top of the Page