சைஜீஜியம் முண்டகம் (Bourd.) Chitra - மிர்ட்டேசி

இணையான பெயர் : ஜாம்போசா முண்டகம் Gamble; யுஜினியா முண்டகம் Bourd.

Vernacular names : தமிழ்ப் பெயர்: கோட்டா சாம்பாமலையாளப் பெயர்: காட்டுசெம்பா; முண்டகம்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழவழப்பானது, முதிர்ந்த பின் ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் தடித்தவை, சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.4 முதல் 1 செ.மீ. நீளமானது, தடித்தவை, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 14-31 X 4-11.5 செ.மீ., நீள்சதுர வடிவானது அல்லது நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி மெட்டையானது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் இதய வடிவானது அல்லது சிறிய இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சிலசமயங்களில் பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் 15-22 ஜோடிகள், தடித்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும், எண்ணற்றவை மலர்களுடையது கோரியம்ப் வகை மஞ்சரி; மலர்கள் பெரியவை, வெள்ளை நிறமானது, நறுமணமிக்கது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை வடிவானது, பச்சை-பிங்க் நிறமானது, 2.5 செ.மீ. நீளமானது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 600-1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் தெற்கு பகுதியில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை- தெற்கு சயாத்திரி மற்றும் குறிப்பாக பாலக்காடு மலைகள் முதல் கூர்க் பகுதி ( மத்திய சயாத்திரி).

சான்று ஏடு :

Henry, et al. Fl. Tamil Nadu 1: 157. 1983; Gamble, Fl. Madras 1: 473.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 178. 2004.

Top of the Page