வைபர்ணம் பங்க்டேட்டம் Ham. ex G.Don - கேப்ரிபோலியேசி

இணையான பெயர் : வைபர்ணம் அக்குமினேட்டம் Wall.

தமிழ் பெயர் : கொணக்காரம்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மெலிதான பட்டை, ப்ரவுன் நிறம், லெண்டிசெல்லேட்; உள்பட்டை பச்சை நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : முதிர்ந்த கிளைகள் லெண்டிசெல்லேட்லேட் புதிய சிறுகிளைகளில் பளபளப்பான பெல்டேட் செதில்கள் உடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரிலையடுக்கம், குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.7-1.5 செ.மீ. நீளமானது, மேற்பரப்பில் கேனாலிகுலேட், பெல்டேட் செதில்களுடையது, இலை அலகு 4-10 X 2 - 4.5 செ.மீ., பொதுவாக நீள்வட்டம், சிலவற்றில் குறுகிய தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது முதல் வால் போன்று நீண்டது, அடிப்பகுதி கூரியது, அலகின் விளிம்பு பின்புறம் வளைந்து (ரெவலுட்) காணப்படும், கோரியேசியஸ், கீழ்பரப்பு பெல்டேட் செதில்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் கேனாலிகுலேட்; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், மேற்பரப்பில் சற்று பள்ளமானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் கொண்ட பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கூட்டு அம்பல் மற்றும் கோரியம்ப், வெள்ளை நிறமான மலர்கள்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்சதுரம்-நீள்வட்டம், பெல்டேட் செதில்களுடையது, 1 செ.மீ. நீளமானது, ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

அன்டர்ஸ்டோரி மரமாக 900 மீ.- 2400 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதியில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Don, Prodr. Fl. Nep.142. 1825; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 213. 1990; Gamble, Fl. Madras 1: 575. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 209. 2004.

Top of the Page