ட்ரைகேலிசியா ஏப்பியோகார்ப்பா (Dalz.) Gamble - ரூபியேசி

இணையான பெயர் : டைக்கொஸ்பர்மம் ஏப்பியோகார்ப்பம் Dalz.; டிப்லொஸ்போரா ஏப்பியோகார்ப்பா J. Hk.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற_வளையமானது; மரத்தின் பட்டை வெளிறிய சாம்பல் நிறமானது, வலைப்பின்னல் பிளவுகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது; நுனியிலுள்ள மொட்டு மஞ்சள் நிற ரெசீன் சுரக்ககூடியது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலையடிச்செதில் குறுகிய முக்கோணமானது, 0.7 செ.மீ. நீளமானது, உரோமங்களற்றது; இலைக்காம்பு 0.6-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் சிறிது கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 5-10 X 1.5-3.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி சிறிது அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டோசியஸ், உரோமங்களற்றது, உரோமங்களுடைய டொமேசியா நரம்புகளின் கோணங்களில் உடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 5-6 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் விளிம்பு நோக்கிய வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி சிறிய சைம் வகை மஞ்சரி; மலர்கள் பாலிகோமொடையீசியஸ், காம்பற்றது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), முட்டை வடிவானது அல்லது கோள வடிவமானது; விதைகள் எண்ணற்றது, ஒழுங்கற்ற தட்டையானது, சிறிது சுருக்கங்களுடையவை (ருக்கோஸ்).

வாழியல்வு :

மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகள் முதல் மழை குறைவாக பெறும் பசுமைமாறாக்காடுகள் வரை காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900-1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்-தெற்கு, மத்திய மற்றும் தென்மகாராஷ்ட்ரா சாகாயத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

மிகவும் அழியும் தருவாயிலுள்ளவை (கிரிட்டிகல்லி எண்டோன்ஜர்டு, ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Bot. Tidsskr. 24: 332. 1902; Gamble, Fl. Madras 2: 620. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 237. 2004; Almeida, Fl. Maharashtra 3:59. 2001; Cook, Fl. Bombay 1: 604.1903.

Top of the Page