English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | மிக பெரிய, தாங்கு வேர்களுடைய (பட்ரஸ்டு) இலையுதிர் மரம், 40 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் கலந்த வெள்ளை நிறம், வழுவழுப்பானது; உள்பட்டை கிரீம் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, லெண்டிசெல் உடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, கிளையின் நுனியில் மட்டும் நெருக்கமாக அமைந்தவை; இலைக்காம்பு 10 செ.மீ. வரை நீளமானது, உரோமங்களற்றது; இலை அலகு 12 X 10 செ.மீ., அகன்ற முட்டை முதல் வட்டவடிவானது (ஆர்பிக்குலார்), அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் இதய (கார்டேட்) வடிவானது, அலகின் விளிம்பு ஒழுங்கற்ற பற்களுடையது, சப்கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது, அலகு 3-5 நரம்புகளை தளத்திலே உடையது. |
| மஞ்சரி / மலர்கள் : | மலர்கள் ஒர் பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் உரோமங்களுடைய பேனிக்கிள், பச்சை கலந்த மஞ்சள் நிறமானது, சிறியகாம்புடையது; பெண்மலர்கள் காம்பற்றவை, ஸ்பைக் மஞ்சரிகளில் காணப்படுகின்றன. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சூல்), மெல்லிய 8 தழும்புகளுடையது, சுரப்பிகளுடையது, குடுவை வடிவமானது (அர்சீயோலேட்), 0.4 செ.மீ. நீளமானது; விதைகள் அதிக எண்ணிக்கையிலுடையது, நுண்ணியது. |