English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய மரங்கள் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழவழப்பானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 1-2.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 4-8 x 2.5-3 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது முதல் வால் போன்றது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது, உலரும் போது ஆலிவ் பச்சை நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் எண்ணற்றவை, இணையானவை, மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது முதல் ஆட்மீடியல்லி ராமிபைடு. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி அடர்த்தியான சைம் போன்ற சிறு அம்பல், தண்டின் நுனியில் காணப்படும்; மலர்கள் வெள்ளை நிறமானது. |
| கனி / விதை : | முழுச்சதைகனி (பெர்ரி) நீள்சதுர வடிவானது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை, பர்புள்; ஒரு விதையுள்ள கனி. |