சைஜீஜியம் கோரியோபில்லோட்டம் (L.) Alston - மிர்ட்டேசி

இணையான பெயர் : மிர்ட்ஸ் கோரியோபில்லோட்டா L.; சைஜீஜியம் கோரியோபில்லோசியம் Sensu Gamble, non Gaertn.

Vernacular names : மலையாளப் பெயர்: செருஜாரா, கரிஞ்ஜாரா, ன்ஜாரா, சென்ஜாரல்கன்னடப் பெயர்: குண்டா நெரலெ

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழவழப்பானது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 5-10 x 1.5-4 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மெட்டையானது, அலகின் தளம் அட்டனுவேட் முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, கோரியேசியஸ், உலரும் போது ப்ரவுன் நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் எண்ணற்றவை, இணையானவை, மெல்லியது; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் கோரியம்போஸ் சைம் வகை; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கருப்பு நிறமானது கோளவடிவானது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை, உரோமங்களற்றது; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை அல்லது மரங்கள் அடர்த்தியற்ற இடங்களில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Ic. t. 273. 1868-1874; Gamble, Fl. Madras 1: 480.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 176. 2004; Saldanha, Fl. Karnataka 2: 27. 1996; Almeida, Fl. Maharashtra 2:269. 1998

Top of the Page