சைஜீஜியம் கேலோபில்லிபோலியம் Walp. - மிர்ட்டேசி

இணையான பெயர் : யுஜினியா கேலோபில்லிபோலியா (Walp.) Wt.

Vernacular names : மலையாளப் பெயர்: நீரோடம்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழவழப்பானது; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.2-0.3 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட் உரோமங்களற்றது; இலை அலகு 2.5-3.5 X 1.5-3 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது அல்லது சப்ஆர்பிக்குலார், அலகின் நுனி சிறிய அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது மற்றும் சிலசமயங்களில் மெட்டையானது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் எண்ணற்றவை, இணையானவை; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் கோரியம்ப் வகை மஞ்சரி, இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது பக்கவாட்டில் காணப்படுபவை; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்சதுர வடிவானது அல்லது தலைகீழ் முட்டை வடிவம், கரும் பர்புள் நிறமானது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 1800-2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - அகஸ்த்தியமலை மலைகள், நீலகிரி மற்றும் பாலக்காடு மலைகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Rep. 2: 180. 1843; Gamble, Fl. Madras 1: 480.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 176. 2004.

Top of the Page