சிம்பளாக்காஸ் மேக்ரொகார்ப்பா Wt. ex Clarke மிகசி. மேக்ரொகார்ப்பா - சிம்பளாக்கேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: பாராலைமலையாளப் பெயர்: மலம்பாராலா, மலம்பரலா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை ரோஸ் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, துருப்போன்ற உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.5-1.3 செ.மீ. நீளமானது, தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், துருப்போன்ற இளம்பருவத்தில் உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது; இலை அலகு 7-16 X 2-5.5 செ.மீ., குறுகிய நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது முதல் வால்-அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி குட்டையான ஸ்பைக் வகை; மலர்கள் காம்பற்றது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்ட வடிவானது, 3 X 1.5 செ.மீ., வெள்ளை நிறமானது; விதை பள்ளங்களுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700-1100 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு பகுதிகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் – அகஸ்த்தியமலை பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Beddome, For. Man. Bot. 150. 1872 & Ic. t. 116. 1868-1874; Gamble, Fl. Madras 2: 784. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 273. 2004; Nootboom, Rev. Symplocac. 221. 1975.

Top of the Page