ரோடொடென்றான் அர்போரிட்டம் Smith மிகசி. நீலாகிரிக்கம (Zenk.) Tagg. - எரிக்கேசி

இணையான பெயர் : ரோடொடென்றான் அர்போரிட்டம் Smith ரகம் நீலாகிரிக்கா (Zenk.) Cl.; ரோடொடென்றான் நீலாகிரிக்கம் Zenk.

தமிழ் பெயர் : மலைபூவரசு; ஆழிஞ்சி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பிளவுகளுடையது; உள்பட்டை இளஞ்சிவப்பு.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது; தண்டின் நுனியில் காணப்படும் மொட்டில் நெருக்கமாக அமைந்த செதிள்களுடையது; செதில்கள் முட்டை வடிவானது, உரோமங்களுடையது
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைகாம்பு 2 செ.மீ. வரை நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 7.5-13 X 3.5 செ.மீ., நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி சிறிய நீட்சியுடையது (ஏபிக்குலேட்), அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு பின்புறம் நோக்கி வளைந்தது, கோரியேசியஸ், அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு பெர்பெரேசியஸ்; அலகின் மேற்பரப்பில் நரம்புகளனைத்தும் பள்ளமாக அமைந்தது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 18 ஜோடிகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியதாக தென்படக்கூடியது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தண்டின் நுனியில் காணப்படுபவை அல்லது கோரியம்ப் போன்று அமைந்தவை, கிரிம்சன் சிவப்பு நிறமானது, சைகோமார்பிக்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), தடித்தது, நீள்சதுர வடிவானது, 2 செ.மீ. வரை நீளமானது, செப்டிசைடல் முறையில் வெடிக்காதவை; விதைகள் எண்ணிலடங்காதவை, நுண்ணியது, நீள்வட்ட வடிவானது, சிறகுடையது.

வாழியல்வு :

பரவலாக மிக உயர்ந்த மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்பு மற்றும் மரங்கள் நெருக்கமற்ற இடங்களில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1500-2400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகள் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - பரவலாக நீலகிரி, ஆனைமலை மற்றும் பழனி மலைகளிலும் மற்றும் அரிதாக வருசநாடு மலைகளிலும் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

அரிதானது (நாயர், 1997)

சான்று ஏடு :

Stevenson, Sp. Rhod.15. 1930; Gamble, Fl. Madras 2: 743. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 263. 2004.

Top of the Page