English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம் 4 மீ. உயரம் வரை வளரக்கூடியது. |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல்-ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை வெள்ளை-கிரீம் நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.7-1.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களுடையது; இலை அலகு 6.5-11 X 3-4.3 செ.மீ., நீள்வட்ட வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது; நரம்புகள் அலகின் பரப்பைவிட பள்ளமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி ரெசீம், முதல் 15 செ.மீ. நீளமானது, தெங்கியவை; மஞ்சரிக்காம்பு 3 செ.மீ. நீளமானது; மலர்காம்பு 0.8 செ.மீ. நீளமானது; மலர்கள் சமச்சீரற்ற மலர் (சைகோமார்பிக்), மஞ்சள் நிறமானவை; அல்லி இதழ்கள் 3, தளத்திலுள்ள இதழ் படகு போன்றது. |
| கனி / விதை : | வெடிகனி (கேப்சியூல்), தலைகீழ் இதய வடிவானது, உப்பியவை; விதைகள் 2, கோளவடிவானது, தட்டையானது; கேர்அங்கள் ஆரஞ்ச்-சிவப்பு நிறமானது. |