English   Kannada   Malayalam   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
| வளரியல்பு : | சிறிய மரங்கள், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது |
| தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, சிறு செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமானது. |
| கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது. |
| இலைகள் : | இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது; இலை அலகு 4-6 X 1-2 செ.மீ., பொதுவாக தலைகீழ் முட்டை வடிவம், சிலசமயங்களில் நீள்வட்டம், அலகின் நுனி மழுங்கியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உலரும் போது சாம்பல் நிறமடைகிறது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-6 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது. |
| மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி இலைக்கோணங்களில் அமைந்த சைம் வகை; மலர்கள் நுண்ணியவை, வெள்ளை நிறம். |
| கனி / விதை : | வெடியாக்கனி, முட்டை வடிவானது, 1-2 அறைகளுடையது; 1-விதையுடையது, பத்ரி (ஏரில்) போன்ற விதையுறை (டெஸ்டா) உடையது. |