போட்டினியா இண்டகிரிபோலியா Lindl. ரகம் சப்லான்சியோலேட்டா - ரோஸ்யெசி

இணையான பெயர் : போட்டினியா நொட்டொனியானா Wt. & Arn.

Vernacular names : தமிழ்ப் பெயர்: சொலுவான்மலையாளப் பெயர்: சொலுவன்மரம், காலாப்பாமரம்கன்னடப் பெயர்: கொடா-பிக்கி, கொடிபிக்கி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரங்கள், 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சிவப்பு ப்ரவுன் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை பிங்க் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் மெல்லிய நீண்ட கூர்மையான நுனியுடையது, பக்கவாட்டில் காணப்படுபவை, எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்தவல்லது; இலைக்காம்பு 1.5-3.5 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 7-15.5 X 3.5-7.5 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, பொரும்பாலும் முனை திருகியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-11 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் கோரியம்போஸ்; மலர்கள் மிகச்சிறிய காம்புடையது, வெள்ளை நிறமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), கோளவடிவானது, சிவப்பு-பர்புள்; விதைகள் 2, தட்டையானது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, மற்றும் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக 900-2100 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சயாத்திரி மற்றும் நீலகிரி .

சான்று ஏடு :

Fl. Ind. Bat. 1.387. 1857; Trans. Linn. Soc. London 13. 103. 1821; Gamble, Fl. Madras 1: 445. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 165. 2004.

Top of the Page